
அமெரிக்கா ஈரான் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, மே மாதம் 15ஆம் தேதி அதிரடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. சென்னையில் மே 15ஆம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.67க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.93.14க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு 5 நாட்கள் மட்டுமே ஆன நிலையில்,தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று உயர்த்தப்பட்டுள்ளதன்படி, சென்னையை பொறுத்தவரை இன்று (மே 19) பெட்ரோல் லிட்டருக்கு 86 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.104.49க்கும், டீசல் லிட்டருக்கு 83 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.11க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதன்பின், பெட்ரோல் போதிய அளவில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.அதற்கு நேர்மாறாக ஐந்தே நாட்களில் அடுத்த பெட்ரோல் டீசல் விலையேற்றம் சாமானிய மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


