குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான, மாநிலங்களவை உறுப்பினர் எச்.டி.தேவ கவுடா பேசினார்.
அப்போது,
நாட்டில் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை தரப்படுவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் இந்த உயரிய முன்னுரிமையை அடைவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் ஐந்தாண்டுகள் இயங்க கூடிய நிலையான அரசாங்கம் அமைந்திருப்பது அவசியம். தற்போது எங்களைப் போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் முழுமையாக இயங்கும். அதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
பிரதமர் மோடியின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை. 22 ஆண்டுகாலம் முதல்வராகவும், பிரதமராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் உடைய மோடி அரசை எந்த பிரச்னையுமின்றி நடத்தக் கூடியவர். பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிர்க் தலைவர் சந்திரபாபு நாயுடு 2024 மக்களவைர்க் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகஜ் கூட்டணியின் தலைவராகவோ அல்லது துணைத் தலைவராகவோ ஆக வேண்டுமென விரும்பினார்.ஆனால் சந்திரபாபு நாயுடுவின் விருப்பத்தை மோடி ஏற்கவில்லை. ஏனெனில் மோடிக்கு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று தெரியும்
இவ்வாறு தேவகவுடா பேசினார்.
தேவகவுடாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,பாஜகவின் தலைவர் என்ற முறையில் அப்படி எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை என்பதைத் தௌிவுப்படுத்த விரும்புகிறேன். மோடியின் தலைமையை கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஏற்றுஜ் கொண்டனர் என விளக்கம் அளித்தார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் தேவகவுடா இப்படிப் பேசியதும் அதற்கு உடனடியாக ஜே.பி.நட்டா மறுப்பு தெரிவித்திருப்பதும் நெருப்பில்லாமல் புகையாது என்பதற்கேற்ப உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.