தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க 2 நாட்கள் பயணமாக தில்லி புறப்பட்டார்.

சனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.

சனவரி 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த் திமுக குழு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் புகார் மனு கொடுத்தது.

இதே போன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தில்லிப் பயணம் மேற்கொண்டுள்ளார் ஆளுநர்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பாஜகவின் செயல்திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாகவே ஆர்.என்.இரவி செயல்பட்டுவருகிறார். இருந்தாலும் தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைக்கச் சொன்னதில் தொடங்கிய சர்ச்சை மற்றும் சட்டமன்ற நிகழ்வுகள் ஆளுநர் மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டார்.

இது பாஜக மீதான கோபமாக மாறியிருப்பதை தில்லி பாஜக உணர்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியை வளர்க்க நினைத்தால் ஆளுநர் சொன்னதைவிட அதிகமாகவே பேசி மக்கள் அதிருப்திக்கு ஆளாகிவிட்டார். இதனால் அவரை மாற்றினால் தமிழ்நாட்டு மக்கள் மனதில் நல்ல பெயர் பெறலாம் என்கிற ஆலோசனை தில்லியில் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

அதன்விளைவாகவே இன்று ஆளுநர் தில்லிப் பயணம் என்கிறார்கள்.

அதனால் விரைவில் தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Leave a Response