தமிழக ஆளுநருக்கெதிராக போராட்டம் – பழ.நெடுமாறன் அழைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசியதைக் கண்டித்து 11.09.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் பனகல் மாளிகைக்கு முன்பாக தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தமிழர்களின் கொதிப்புணர்வை வெளிக்காட்டும்படி வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response