சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை ஏன்? – சீமான் விளக்கம்

திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளார். இவர் சிங்கப்பூர் சென்று அங்கு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு அந்த இளைஞரை மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவே கூடாது என்று தடை விதித்து அவரை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த அந்த இளைஞர் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாகிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அந்நாட்டு அரசு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அந்த இளைஞரை வேலையை விட்டு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் கேட்கப்பட்ட போது,

அரசின் இந்தச் செயலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இது அவசியமற்றது, ஏற்கனவே சிங்கப்பூர் அரசு கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட என் பிள்ளைகளை அங்கிருந்து அனுப்பியுள்ளது.இதுகுறித்து நான் பலமுறை தூதரகத்தில் முறையிட்டு, நீங்கள் இவ்வாறு செய்வதெல்லாம் சரியில்லை என்று கூறி போராடிப் பார்த்தேன். இருப்பினும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.

என் அண்ணன் பிரபாகரனைக் கொண்டாடும் ஒரே காரணத்திற்காக அந்நாட்டு அரசு நாம் தமிழர் கட்சியினை சேர்ந்தவர்களை நிராகரிக்கிறது. ஆரம்பத்தில் எங்கள் கட்சி சிங்கப்பூரில் மிகவும் வலிமையாக இருந்தது, ஆனால் இப்போது அந்த சூழ்நிலை மாறி எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலேயே நிராகரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து விட்டது.பணிபுரியும் அவருக்கே இந்த நிலைமையென்றால், என் நிலைமையை யோசித்துப் பாருங்கள், என்னால் இதற்கு வருத்தம் தான் தெரிவிக்க முடிகிறது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response