புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – சென்னையில் மீண்டும் மழை

வட உள் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயமுத்தூர் ,சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது.

இது நவம்பர் 17 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் நவம்பர் 18 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Response