நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மோடி அரசு மீது வாகன ஓட்டிகள் கடுங்கோபாம்

தமிழ்நாட்டில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாகப் பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் ஒன்றிய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.அதற்குப் பின், 40 விழுக்காடு சாலை பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 8-10 விழுக்காடு அளவிற்கு சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ருபாய் 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது.

கட்டணம் வசூலிக்கக்கூடாது என்கிற இடங்களில் கூட கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருப்பதால் ஒன்றிய அரசின் மீது வாகன ஓட்டிகள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

Leave a Response