ஓபிஎஸ் மனைவி திடீர் மறைவு – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 63.

முன்னாள் முதல்வரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அவர் சில நாட்களில் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி திடீர் மறைவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சிப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Leave a Response