சிக்கியது சிங்களம் – தமிழினப்படுகொலை பற்றி விசாரிக்க ஐநாவில் தீர்மானம் நிறைவேறியது

தமிழீழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது,இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேறியது.

இது தொடர்பாக சிங்கள அரசைத் தண்டிக்கக் கோரி தமிழினம் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா.,மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

2012 – 2014 ஆம் ஆண்டுகளில் அதிபராக இருந்த, தற்போதைய பிரதமர், மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில்,அந்தத் தீர்மானங்கள், இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்ட தாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், ஜெர் மனி உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

கடந்த 18 ஆம் தேதி முதல் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசைக் கடுமையான விமர்சித்தன. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மூலம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க முடியும். தேவைப்பட்டால் இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படையை அனுப்ப வாய்ப்புள்ளது.

Leave a Response