இசுரேல் பாலஸ்தீன சிக்கலுக்கு தனிநாடே தீர்வு எனும் மோடி தமிழீழத்தை எதிர்ப்பதேன்?

இந்​தோனேசி​யா,ஆஸ்​திரேலி​யா,நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​கு,பிரதமர் மோடி அரசுமுறை சுற்​றுப்​பயணம்
மேற்​கொண்​டுள்​ளார்.ஜூலை 7 அன்று,முதல்கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமானநிலையத்தில் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்​தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்​சாக​மாக வரவேற்று முப்​படை அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

அங்கு பேசிய மோடி,இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர இரு நாடுகளாக்குவதே தீர்வு என்று கூறியுள்ளார்.

இதையொட்டி,உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை-தமிழீழம் சிக்கலுக்கு இது பொருந்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர இரு நாடுகளாக்குவதே தீர்வு என இந்தியத் தலைமையமைச்சர் மோடி இந்தோனேசியாவில் அறிவித்துள்ளார்.மேலும்,பேச்சுவார்த்தையின் மூலமே உலகநாடுகளுக்கிடையேயுள்ள சிக்கல்களைத் தீர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர்வதற்கு மோடி கூறிய தீர்வு இலங்கை – தமிழீழம் ஆகியவற்றுக்கும் பொருந்துமே.இரண்டு பிரச்சனைகளும் ஒரே மாதிரியானவை.இருநாட்டுத் தீர்வு ஒன்றுக்குப் பொருந்துமெனில் மற்றொன்றுக்கும் பொருந்தும்.இலங்கையை இரு நாடுகளாக்கும் திட்டத்தை மோடியும், இந்திய அரசும் எதிர்ப்பது ஏன்?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response