அஜித்துக்கு டிடிவி.தினகரன் வாழ்த்து

தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும்
2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ்,மோகன்லால், நாகார்ஜூனா, நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

தமிழில், சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்விருது பெற்றவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.

அம்முக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…

இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார்,பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response