ஜெயலலிதா கர்நாடகா சென்றபோது என்ன நடந்தது தெரியுமா? – பிஆர்.பாண்டியன் விளக்கம்

மேகதாது அணை தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த முதல்​வர் விஜய்​யை, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் அழைப்பு விடுத்ததற்கு தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கப் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் எதிர்ப்பு
தெரி​வித்​துள்​ளார்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது….

2013 இல் தமிழகத்​துக்கு கர்​நாடகா தண்​ணீர் திறக்க மறுத்​ததற்கு எதி​ராக உச்சநீதி​மன்​றத்​தில் அன்​றைய முதல்​வர் ஜெயலலிதா வழக்​குத் தொடர்ந்​தார்.இதையடுத்​து,உச்சநீதி​மன்ற உத்​தர​வின்​படி,கர்​நாடக முதல்​வருடன் பேச்​சுவார்த்தை நடத்த முதல்​வ​ராக இருந்த ஜெயலலிதா சென்​றார்.அப்​போது,தமிழகத்​தில் நில​வும் வறட்​சியைச்
சுட்​டி​க்காட்​டி,கர்​நாடகம் தண்​ணீர் தரவேண்​டும் என ஜெயலலிதா வலி​யுறுத்​தி​னார்.ஆனால்,தண்​ணீர் திறக்க இயலாது என அப்​போது கர்​நாடகமுதல்​வ​ராக இருந்த ஜெகதீஷ் ஷெட்​டர் மறுத்​து​வி்ட்​டார்.

அதன்​பின்,இந்தப் பேச்​சு​வார்த்தை குறித்து உச்சநீதி​மன்​றத்​தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்​பித்​தது.அதை ஏற்​றுக்கொண்ட உச்சநீதி​மன்​றம்,இனி காவிரி குறித்து எந்த ஒருபேச்​சு​வார்த்​தை​யிலும் கர்​நாடகம்,தமிழகம் தனிப்​பட்ட முறை​யில் ஈடு​படக்கூடாது எனவும்,தமிழகத்​துக்குத் தேவை​யான தண்​ணீரை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்​டும் எனவும் உத்​தர​விட்​டது.

அதன்​பின்,பிரதமர் உத்​தர​வின் பேரில் கர்​நாட​கா​வில் இருந்து தமிழகத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​பட்​டது.இந்தநிலையில்,காவிரி நீர் மற்​றும் மேகதாது அணை விவ​காரம் தொடர்​பாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி பேச்​சுவார்த்தை நடத்த வரு​மாறு தமிழக முதல்​வர் விஜய்க்கு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் அழைப்பு
விடுத்​துள்​ளார்.இது மேகதாது அணை கட்ட எடுக்​கும் முயற்​சியை நியாயப்​படுத்​தும் வித​மாக எடுக்​கப்​படும் நயவஞ்சக நடவடிக்​கை​யாகும்.

மேலும்,பேச்​சு​வார்த்தை நடத்த தமிழக முதல்​வருக்கு கர்​நாடக முதல்​வர் அழைப்பு விடுத்​திருப்​பது உச்சநீதி​மன்ற உத்​தர​வுக்கு முரணானது ஆகும்.எனவே, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரின் அழைப்பை தமிழக முதல்​வர் விஜய் நிராகரிக்க வேண்​டும்.காவிரி மேலாண்மை ஆணை​யம் மட்​டுமே காவிரி நீர் தொடர்​பாக முடி​வெடுக்க
முடி​யும்.ஆணை​யத்​தின் அனு​மதி இல்​லாமல் எந்த ஒரு மாநில​மும் காவிரி நீரை பகிர்ந்​தளிக்​க​வும்,அணை
கட்​டு​மானம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் இயலாது என்​ப​தை உணரவேண்​டும்​.

இவ்​வாறு அவர் ​கூறி​னார்​.

Leave a Response