தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியா? ஆளுநர் ஆட்சியா? – மக்கள் கேள்வி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நெல்லையில் நேற்று அளித்த பேட்டியில்….

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33 ஆவது பட்டமளிப்பு விழா வருகிற 28 ஆம் தேதி பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார்.உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்குகிறார்.கேரளா கொச்சி மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

மொத்தம் 33,877 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் மாளிகை வழிகாட்டுதல்படி விழா தொடக்கத்தில் முதலாவதாக வந்தே மாதரம் பாடப்படும்.தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படும்.3 ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.நிகழ்ச்சி நிறைவில் வந்தே மாதரம் மீண்டும் பாடப்படும். இறுதியாக தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.

இவ்வாறு துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்படுமா? என்று துணைவேந்தரிடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர்,இது கவர்னரின் விழா,இதை கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் எங்களுக்கு ராஜ்பவனில் இருந்து அளிக்கப்பட்ட தகவல்.இதுதான் உத்தரவு.குடியரசுத் தலைவருக்கும், கவர்னர் நிகழ்ச்சிக்கும் இதுதான் பாடப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு என்றார்.

அவருடைய இந்தப் பேட்டி பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? விஜய் ஆட்சி நடக்கிறதா? யார் உத்தரவு போடுவது? என்று ஏராளமானோர் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பொழிலன்,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில்,
அவர் எழுதிய தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படுமாம்..
வரும் சூலை 28 அன்று நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் வந்தேமாதரம்தான் முதலில் பாடப்படுமாம்..
மானமில்லாதவர்கள் தவறாமல் பங்கேற்றுப் பாடுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

Leave a Response