
நீட் தேர்விற்கு எதிராக போரட்டம் நடத்தும் மாணவர்களுக்கு புதியதமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது….
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
விஜய் தலைமையிலான தவெக அரசு,ஒன்றிய அரசுக்கு நண்பன் போன்றே இருக்கிறார்கள் அதேநேரம் நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரானவர்கள் எனவும் பேசுகிறார்கள்.இதைப் பார்த்தால் “பூனைக்கு நண்பன் பாலுக்குக் காவலன்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.ஜனநாயகம் குறித்து படமெடுத்தால் மட்டும் போதாது,அதுகுறித்து முழுமையான புரிதல் வேண்டும்.ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறை.வெறுமனே பேசுவது,எழுதுவது மட்டும் ஜனநாயகமாக இருக்கக்கூடாது.வாழ்வே ஜனநாயகமாக இருக்கவேண்டும்.அந்தவகையில் போராடும் உரிமையை இந்திய அரசியல் சாசனம்,நம் குடிமக்களுக்கு வழங்கி இருக்கிறது.சிறிய அல்லது பெரிய என எப்படிப்பட்ட போராட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.மாணவர்கள் ஒரு கட்சிக்கு எதிராக ஒன்றும் போராடவில்லை,அவர்களின் உரிமைகளுக்காகத்தானே போராடுகிறார்கள்.இந்தச் சூழலில் அவர்கள் போராடுவதை எதற்குத் தடுக்கவேண்டும்.உண்மையில் ஜனநாயகம் என்ற வெற்று வார்த்தை பேசுவது உதவாது.ஜனநாயகனாக வாழவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


