கேஸ் சிலிண்டர் பதிவில் இந்தித்திணிப்பு – மக்கள் எதிர்ப்பால் மாற்றம்

இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்க்ள் 8454955555 என்ற எண்ணுக்கு தவறிய அழைப்பு கொடுத்து, எரிவாயு உருளை பதிவு செய்யலாம்.

இதன் மூலம் பதிவு செய்வதற்கான அழைப்புகளுக்காக வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கிராமப் புறங்களில் வயதான மக்கள் ஐவிஆர்எஸ் அழைப்புகள் மூலம் சிரமப்படத் தேவையிருக்காது. இதற்கான திட்டத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் நேற்று தொடங்கி வைத்தார்.

அதேபோல புதிய எரிவாயு உருளை பெற தவறிய அழைப்பு கொடுக்கும் வசதியும் புவனேஸ்வரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்டுள்ள புதிய எண்ணில் புதிய எரிவாயு உருளை பதிவு செய்ய அழைத்தால் இந்தியிலேயே நீண்டநேரம் பேசுவதால் இந்த பேசாத மாநிலங்களில
உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தவறிய அழைப்பு கொடுக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response