நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? – கமல் பதில்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் இரையும்மன் துறை, தூத்தூர் மீனவ கிராமங்களில், மீனவ மக்களை சந்தித்துப் பேசினார். பின்னர், தேங்காய்ப்பட்டனம் அருகே உள்ள இறையுமன்துறை பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, திமுகவோடு கூட்டணி அமைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலினை இரகசியமாகக் கமல் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததாக வெளிவந்த தகவல் ஊடகங்களின் யூகம்தான் என்றும், யாரையும் இரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

அதேபோல, இஸ்லாமியக் கட்சித் தலைவர் ஒவைசி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக வெளியான தவல்களும் ஊடகங்களின் யூகம்தான் என்று கூறினார்.

Leave a Response