நேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்தலாக இருக்கப் போவதில்லை. இந்தத் தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகமே உள்ளாட்சித் தேர்தல். இந்த அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை.

மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிடைக்கக் கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை இலட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதை தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை.

இனி வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நமது இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து,சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை, இந்தத் தேர்தலிலும் பின்வாங்கிவிட்டார்.நேரா முதலமைச்சர்தான் என்கிற கிண்டல்கள் வருகின்றன.

Leave a Response