ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (டிசம்பர் 7) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னைச் சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாகப் பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன்.
படத்தின் பப்ளிசிட்டிக்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். பப்ளிசிட்டிகாக வருகிறாரா? ஏய் தலைவரே பப்ளிசிட்டிடா.
தான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்லும்போது கூட ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர்களைப் புகழ்கிறார். மு.க.ஸ்டாலின் தொடங்கி, எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்கல(சீமான்) அவர் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார்.
பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு தர்பார் அமையும் என எனக்குத் தோன்றுகிறது. கமல், ரஜினி இருவரும் கை கோர்த்து நடக்கும்போது புரியுது. இன்னும் என்ன நடக்குமோ? அதிசயம் அற்புதமே ரஜினி தான்.
முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள். பின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி அவர்கள் மீதுள்ள மரியாதை.
நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனால் கூட பரவாயில்லை. ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
தர்பார் பாடல்விழாவில் சீமானை விமர்சனம் செய்து பேசிய ராகவா லாரன்ஸை பலரும் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ராகவாலாரன்ஸைப் பற்றிப் பேசியதையெல்லாம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி அவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுவருகின்றன.
இதனால், ரஜினியைப் புகழ்வதற்காக சீமானை விமர்சனம் செய்துவிட்டு இப்படி மாட்டிக்கொண்டாரே என்று அவர் மீது பரிதாபப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.