சூர்யாவுக்கு சீமான் ஆதரவு – மன்சூர் அலிகான் வேண்டுகோள்

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ஜூலை 27 அன்று சென்னையில் நடந்தது.

சிவகுமார்,சூர்யா,ஜோதிகா உள்ளிட்ட பலர் கல்ந்துகொண்ட அந்நிகழ்வில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,,,,

சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களைக் கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும்.

கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார்.

இந்தப்படம் பெரிய வெற்றி பெருவதோடு அவார்டும் வாங்க வேண்டும்.

சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response