சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் சீமான் தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இனமானத்தமிழர்களும், உயிரினும் மேலான உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று இப்பேரழிவுத்திட்டத்தை விரட்டியடித்து நம் தாய் மண்ணைக் காத்திட அணியமாக வேண்டும் என உரிமையோடு அழைக்கிறேன் என்று சீமான் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் (காலை 11 மணி), கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமான் தலைமையில் ராதாபுரம் பகுதியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும்

ராதாபுரம் தாலுகா பகுதிக்குள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதித்துள்ளதாகவும் அங்கிருந்து செய்திகள் வருகின்றன.

Leave a Response