தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் சீமான் தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமான் தலைமையில் ராதாபுரம் பகுதியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு,
ராதாபுரம் தாலுகா பகுதிக்குள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதித்தனர்.
இதனால், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமான் தலைமையில் இராதாபுரம் பகுதியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் #பாளையங்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.