பெங்களூருவில் பிரகாஷ்ராஜ் போட்டியிட இதுதான் காரணமா?

நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டநிலையில், இப்போது பிரகாஷ்ராஜும் களமிறங்கியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சனவரி 1 அன்று பதிவிடுகையில், அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டு பிறந்துள்ளது. புதிய தொடக்கம் ஆரம்பமாகி இருக்கிறது. உங்களின் ஆதரவால், அதிகமான பொறுப்புகளுடன், புதிய பாதையை தொடங்கப் போகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன். எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்பின் இன்று மாலை, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்.
எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.

என்று ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

அந்தத் தொகுதி இப்போது பாஜக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வருகிற தேர்தலில் அந்தத் தொகுதி காங்கிரஸ் வசம் போகும் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில் பிரகாஷ்ராஜ் பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பகிர்ந்து மீண்டும் பாஜக வெற்றிக்கு வழிவகுப்பார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response