கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் புகைப்படத்தை வைத்து பாஜகவினர் கண்டனப் பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
பாஜக தேசியத் தலைவர் எச்.ராஜா, “இவர் அங்கு போனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல. படம் சூட்டிங் எடுக்க. வெட்கம்” என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் இளைஞரணித் தலைவர் வினோஜ் பி செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதுக்கு இந்த வெட்டி பந்தா? உன்னுடைய அடுத்த பட போஸ்டருக்கு தென்னை மரம்தான் கிடைத்ததா?! தென்னை மரம் ஒவ்வொரு விவாசயிக்கும் பிள்ளை போல அதை மிதித்து போஸ் கொடுக்கும் நீங்களா மக்களை காக்கப்போகிறீர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் மூடர்கூடம் இயக்குநர் நவீன், “அடப்பாவிகளா. நீங்க வாழ்க்கைல தென்னமரத்துமேல கால வச்சு போஸ் குடுத்ததே இல்லனு சொல்லுங்க. அப்புறம் ஏண்டா தாயா வணங்குற பூமாதேவி மேல கால் வச்சி நடக்கறீங்க. புஷ்பக விமானமேறி பறந்து போக வேண்டியதுதான” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
இதனால் நவீனுக்கு ஆதரவாகப் பலர் பேசிவருகின்றனர்.