அதிகரிக்கும் நீர்வரத்து – மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை

பெங்களூரு மற்றும் காவிரி நீரப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,
காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுகிறது.

அதன் காரணமாக தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கபினியிலிருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை தாண்டியுள்ளது. நாளை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 60,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 33-வது நாளாக தடை நீடிக்கிறது.

மேட்டூர் அணை நிரம்பினால் அங்கிருந்தும் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படும்.

Leave a Response