
நடிகை கஸ்தூரிக்கு கவிஞர் சுகிர்தராணி கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது…
பதினெட்டு ச ம உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக் குறித்துப் பேசும்போது திருநங்கை சகோதரிகளை இழிவுபடுத்தி பதிவிட்டிருக்கும் கஸ்தூரியின் சாதித் திமிரையும் மானுட மாண்பற்ற சொல்லையும் கண்டிக்கிறேன்.
அவர் தன் சொற்களைத் திரும்பப் பெற்று, திருநங்கைத் தோழிகளிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிடில் வரும் ஞாயிறன்று அவர் வீட்டுமுன்கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முன்னெடுப்போம்.
முதலில் புகைப்படத்தோடு பதிவு போட்டுவிட்டுப் பின்னர் புகைப்படத்தை மட்டும் நீக்கியிருக்கிறார்.
அதற்கான ஆதாரம் அவரே அதை சொல்லியிருப்பதுதான்.
இவ்வாறு கவிஞர் சுகிர்தராணி கூறியிருக்கிறார்.


