கால்பந்து திருவிழா – கடைசி நிமிடத்தில் உருகுவே வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன. 2-வது பாதியிலும் இதேநிலை தொடர்ந்தது.

இறுதியில் ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜிமென்ஸ் கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வெற்றி பெற்றது.

Leave a Response