
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்வீடன் அணியும், இங்கிலாந்தும் சந்தித்தன.
போட்டியின் முடிவில் இங்கிலாந்து ஸ்வீடனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் Harry Maguire தனது அணிக்காக முதல் கோலை போட்டார். இது சர்வதேச போட்டிகளில் இவர் அடிக்கும் முதல் கோலாம்..!
ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Dele Alli தன்னை நோக்கி வந்த பந்தை தலையால் அடித்து கோல் போஸ்ட்டுக்குள் அடித்து 2-வது கோலை போட்டுக் கொடுத்தார்.
ஸ்வீடன் வீரர்களும் நன்றாகவே விளையாடினார்கள். கடைசிவரையிலும் போராடினார்கள். அவர்கள் அடித்த பல ஷாட்டுகள் அதிர்ஷ்டம் வாய்க்காமல் வீணாகப் போயின.


