
விஜய் தொலைக்காட்சியின் சிறந்த திரைக்கலைஞர்களுக்கான விருதுவிழா ஏப்ரல் 25 அன்று சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது அவருடைய குடும்பவிழா போல. அதனால் விழா நடக்கும் நாள் அவருக்குச் சிறந்தநாள். விஜய்தொலைக்காட்சியும் அவருக்கு சிறப்புச் செய்துவிடும்.
ஆனால், இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு விருது எதுவும் இல்லை. ஆனாலும் விருது கொடுப்பதற்காக அவர் வந்திருந்தார். மம்முட்டி மகன் துல்கருக்கு விருது கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தவருக்கு விருது கிடைத்தது போல ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
விருது கொடுத்துவிட்டு வந்து அமர்ந்ததும் பிரபுதேவாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் சிவகார்த்திகேயனைப் பார்க்க விரும்புகிறேன் அவரை வரச்சொல்லுங்கள் என்று சொல்லியனுப்பியிருக்கிறார். அங்கிருந்த ஒரு கேரவனுக்குள்ளேயே அமர்ந்து சுமார் ஒருமணிநேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்களாம். வெளியே வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாராம் சிவகார்த்திகேயன்.
பிரபுதேவாவைத் திரையில் பார்த்து வியந்து கைதட்டியிருக்கிறோம், இன்று அவரே கூப்பிட்டு உங்கள் நடிப்பு நடனம் ஆகிய எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார் கேட்கவே ரொம்ப சந்தோசமாக இருந்தது என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்துகொண்டிருக்கிறாராம். நடனம் பற்றி சில குறிப்புகளையும் அவர் சொல்லிக்கொடுத்தாராம். சும்மாவே சிறப்பாக நடனம் ஆடுகிறவர் என்று பெயர் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடனபபுயலே பாராட்டிய பிறகு கேட்கவா வேண்டும்? அடுத்தடுத்த படங்களில் அவருடைய ஆட்டம் கவனிக்கப்படுகிற மாதிரி அமையும் என்று அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள்.


