வா — வெற்றியை வரவேற்கும் அருண்விஜய்

தடையறத்தாக்க படத்துக்குப் பின் வந்த நிறையக் கதைகளில் இருந்து இந்தக்கதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இந்தப்படத்தில் என்னுடைய வேடத்துக்கு உள்ள முக்கியத்துவம்தான். அஜித்துடன் சேர்ந்து நான் நடித்த என்னைஅறிந்தால் படத்துக்குப் பிறகு என்னை எல்லோரும் விக்டர் என்று கூப்பிடுவதுபோல இந்தப்படம் வெளிவந்தால் என்னை எல்லோரும் வேலு என்று கூப்பிடுவார்கள் என்று அருண்விஜய் நம்பிக்கையாகச் சொல்லும் படம் வா.
அவர்களுடைய சொந்த நிறுவனமான
ஃபெதர் டச் எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக அருண்விஜய்யும், நாயகியாக கார்த்திகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சதீஷ், ரேணுகா, ஜெயபிரகாஷ், கல்யாண், வம்சி கிருஷ்ணா, சுஜா வருணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரத்தினசிவா. இவர் இயக்குனர் பன்னீர்செல்வத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இந்தப்படத்துக்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடல்களை விவேகாவும், கருணாகரனும் எழுதியிருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கௌதம் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய்க்குக் கிடைத்திரும் வரவேற்பு இந்தப் படத்தின் வியாபாரத்துக்குப் பலனாக அமைந்திருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
வியாபா ரீதியாக மட்டுமின்றி ரசிகர்கள் உட்பட எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு வந்திருக்கிறது என்கிறார் அருண்விஜய்.
இதற்கடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். அவர் நடித்த முந்தைய படங்களும் வெற்றி அடுத்தும் கெளதம் இயக்கும் படம் என்பதால் இந்தப்படத்துக்குப் பெரும் பலம் சேர்ந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Leave a Response