
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா மணவிலக்குக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கணவர் விஜய்யைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் மணவிலக்குக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில்….
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இதைக் கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.எனக்கு நிறைய கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை ‘அந்த’ நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தைத் தருகிறது. ஆனால்,அந்தப் பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார். பொது வெளியில் நன்மதிப்பைக் கெடுக்கக் கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2 ஆவது எதிர் மனுதாரராகச் சேர்ப்பேன். விஜய்யின் நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மன ரீதியான சித்திரவதை அனுபவித்தேன். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் மனைவி சங்கீதாவின் வெளிப்படையான இந்தக் குற்றச்சாட்டு நடிகர் விஜய்க்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.


