
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்றொரு கட்சி தொடங்கி நடத்திவ்ருகிறார். இவருக்கு 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 அன்று திருமணம் நடந்தது.அவர் மனைவி பெயாற் சங்கீதா.
தமிழீழத்தைப் பூர்வீகமாக கொண்டவர் சங்கீதா. இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யிடம் இருந்து மண விலக்குக் கோரி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது….,
எங்கள் திருமண வாழ்க்கை தொடக்க ஆண்டுகளில் இனிமையாகவே சென்றது. 2021-ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தேன். நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதி கூறியும் அதன்படி நடக்கவில்லை. சிறிதும் வருத்தமின்றி நடிகையுடனான தொடர்பை விஜய் தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். கணவன் – மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். எனவே விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு வரும் மார்ச் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.அன்றைய தினம் நடிகரும் தவெக தலைவருமான விஜய் குடும்ப நல நீதிமன்றத்தில் நேர் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


