நிலம் எங்கள் உரிமை
நிலம் காக்கப் போராட்டமே வழி
உடலையே ஆயுதமாக்கிப் போராடுவோம்
நம்மள அடிக்கிறவங்கள திருப்பி அடிச்சா நம்ம ரவுடின்னு சொல்றாங்க..
இராமன் வில்லன் இராவணன் நாயகன்
ஆக்கிரமிப்பு நிறமான காவியை கறுப்பு சிவப்பு நீலம் ஆகியன இணைந்து அழிக்கும்
பாஜகவின் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில்,பன்முகத்தன்மைகளை மறுத்து ஒற்றைத்தனமையைக் கொண்டுவரத் துடிக்கும் இந்நேரத்தில் இப்படம் அதற்கெதிராக உரத்துப் பேசுகிறது.
காலா படம் இதுவரை ரஜினி பேசும் அரசியலுக்கு நேரெதிராக அமைந்துள்ளது. அதிலும் ரஜினியே நடித்திருப்பது வியப்பு.
ரஜினியைத் தோற்கடித்த ரஜினி படம்.
கதைக்களம் மும்பை தாராவி. ஆனால் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, தமிழீழம் என எல்லாக் களங்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம்.
இந்துத்துவ அரசியல் எதிர்மறையானது என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.