கர்நாடக தேர்தல் 16 தொகுதிகளில் மோசடி வெற்றி – பாஜகவை சுற்றும் சர்ச்சை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பவர்களுக்கு,,,

நேற்றைய கர்நாடக தேர்தலில் பிஜேபி முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட்ட ஹூப்லி மத்திய தொகுதியில் வெற்றி பெறுகிறார்.
ஆனால் இறுதியில் வாக்குப் பதிவை விட 207 வாக்குகள் அதிகம் காண்பிப்பதை எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து முறையிடுகின்றனர்.

வெற்றியை RETURNING OFFICER நிறுத்தி வைக்கிறார். முறைப்படி அனைத்து சுயேட்சைகள் உட்பட எதிர்கட்சியினரும் புகார் மனு அளிக்கிறார்கள்.

மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று உத்தரவை கொடுக்கிறார்.

ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிப்பு கொடுக்கிறார். கட்சிகள் தயாராக வாக்கு என்னும் மையத்தில் காத்திருக்கிறார்கள்.

10.30 மணி வரை உத்தரவு வரவில்லை என்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவில்லை. இரவு 11 மணிக்கு ஒரு அறிவிப்பு வருகிறது.

வெற்றி வேட்பாளர் பெற்ற கூடுதல் வாக்குகள் 20000 மேல் இருப்பதால் 457 வாக்குகளை மீண்டும் எண்ணுவதில் பலனில்லை என்றும், அதனால் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படுகிறது.

அறிவிப்பின்படி அதில் பலனில்லை தான் என்றாலும், எவ்வாறு வாக்கு பதிவை விட கூடுதலாக வாக்குகள் இருந்தது என்பதற்கு என்ன விடை இருக்கிறது.??

அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தான் சீலிடப்பட்ட EVM மெஷினில் எப்படி அதிக வாக்குகள் பதியப்பட்டு இருக்கும்.??

பிஜேபி 500 வாக்குகள் உட்பட்ட வித்தியாசத்தில் வென்ற 16 தொகுதிகளில் இதே நிலை தானா..??

குறிப்பிட்ட சில balot மெஷின் மட்டும் மாற்றபட்டு இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது தானே.?? இல்லை இது மனித தவறு தான் என்றும், எண்ணிக்கையை சரிபார்க்க தவறிவிட்டோம் என்றோ தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கலாமே.??

மாறாக தேர்தல் ஆணையம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாக்கு வித்தியாசத்தை பயன்படுத்தி வெற்றி அறிவிப்பு செய்திருப்பது உள்ளபடியே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மறைக்கப்பட்டால் மட்டுமே EVM சர்ச்சை அடங்கும் என்பது மோடி சர்க்கார் அறிந்த ஒன்றே.

– ஜெர்ரி சுந்தர்

Leave a Response