உதயநிதியுடன் கூட்டணி சேர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!


சமீபகாலமாக ஒரு நடிகைக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீசானது என்றால் அது நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்காகத்தான் இருக்கும். ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத். விக்ரம் வேதா படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமா உலகில் பிரபலமானார்.

அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிவரும் பி.எஸ்.மித்ரன், இந்தப் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பிரியதர்ஷன் இயக்கும் ‘நிமிர்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response