எதிர்ப்பவர்களுக்கு பதிலடி தர லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படியா செய்வார்..?


தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றியதை மிகவும் தைரியமாக பேசக்கூடியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதனால் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் வலிய தேடிக்கொள்வது இவருக்கு வாடிக்கைதான்.

சமீபத்தில் வெளியான ‘அருவி’ என்கிற படத்தில், இவர் தொகுத்து வழங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கிண்டலடித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை பார்த்து கோபம் அடைந்த அவர் தன்னுடைய கருத்துக்களை கூறினார்.

உடனே அதற்கும் ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சவ ஊர்வலத்தில் இடம்பெற்றுள்ளது போன்றொரு வித்தியாசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘நீங்கள் என்னை கொன்றாலும் நான் அதை கொண்டாடுவேன், என பதிவுட்டுள்ளார். எதிர்ப்பவர்களுக்கு பதிலடி தரவேண்டியதுதான்.. அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படியா செய்வார் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response