தோழர்களே…
எனது தந்தை லெ.முனியாண்டி அவர்கள் தினமணியின் இலவச இணைப்பாக ஒரு காலத்தில் வந்து கொண்டிருந்த ”முலிகை மணி”என்கிற இதழை படித்து விட்டு சிறு சிறு வைத்தியங்களை செய்ய தொடங்கினார்.நாளடைவில் ஒரு சித்த மருத்துவராகவே செயல்பட தொடங்கி விட்டார்.வீடு முழுவதும் வேர்,இலை பொடிகள்…கும்பல் கும்பலாக நோயாளிகள் என்று வாழும் காலம் வரை செயல்பட்டார்.
பல நோய்களை சர்வ சாதாரணமாக குணப்படுத்தி உள்ளார்.
யாரிடமும் பணம் பெற்றதில்லை.
வேண்டிய மருந்துக்களை எழுதி கொடுத்து வாங்கி வரச்சொல்லுவார்.
குறிப்பாக பெண்களின் மாதந்திர சிக்கலுக்கு ஒரு நிரந்திர தீர்வை மூன்று வேலை மருந்தில் உண்டாக்குவார்.வெளி மூலம்,உள்மூலம் என்கிற நோய்க்கு துத்தி இலையின் உதவியுடன் சிறப்பான மருத்துவம் அளித்து,நிரந்தரமாக குணம் மடைய வைப்பார்.
ஆக,சித்த மருத்துவம் சிக்கலான நோய்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நல்ல தீர்வைத்தரும் என்பது எனது தந்தையின் மூலம் நேரடியாக அறிந்தவன்.அந்த நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பார்பன கமலுக்கு சொல்லுகிறேன்…
இந்தியாவில் உள்ள தேசிய இனக்களிலேயே தங்களுக்கென்று மருத்துவம் கொண்டுள்ள தேசிய இனம் தமிழர் தேசிய இனம் மட்டும் தான்.
அது எங்களின் சித்த மருத்துவம்.
மனித குலத்தின் வரலாற்றில் மகத்தான கண்டுபிடிப்புகளை தமிழர்கள் மருத்துவத்தில்
நிகழ்த்தி இருக்கிறார்கள்.
இந்த பூமிப் பந்தில் இருக்கிற அனைத்து விதமான தாவரங்களையும் ஆய்வு செய்து அவற்றின் மருத்துவக் குணங்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.இன்றைக்கு வரை சித்த மருத்துவத்துக்கு நிகரான மருத்துவக் கண்டுபிடிப்புகள் உலகத்தில் இல்லை.
எங்களின் பாட்டி வைத்தியமும்,கை மருத்துவமும் பலன் தருகிற அளவுக்கு வேறு எந்த இயற்கை மருத்துவமும் பயன் தராது.
இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து,
காடு மலைகளில் அலைந்து திரிந்து அனுபவப்பட்டு தாவரங்களின் மருத்துவக் குணங்களை அறிந்திருக்கிறார்கள்.
நாக பாம்பை கடிக்க வைத்து காப்பாற்றுகிற திறன் படைத்தது சித்த மருத்துவம்.ஒரு தாவரம் மனிதர்களின் பல நோய்களை சரி செய்யக்கூடிய வல்லமை கொண்டது.
அப்படிப்பட்ட சித்த மருத்துவத்தை கிண்டல் செய்துள்ளார் திரைக் கூத்தாடி பார்ப்பன கமல்.
அய்யா பார்ப்பனரே உங்களின் முற்போக்காளன் வேஷம் எங்களிடம் வேண்டாம்.
உமது ஆர் எஸ் எஸ் முகம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.ஆகவே உமது ஆரிய ஆராட்சிகளை தமிழர்களிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
முடிந்தால் எமது தேசிய இனத்தின் ஆராட்சியாளர்களான பெரும் சித்தர்களின் பதிவுகளை படியுங்கள்.உங்களுக்கான விடையை அவர்கள் சொல்லுவார்கள்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.–குறள் 373
(கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.)
நீர் என்ன தான் பேசினாலும்,பெரியாரின் சட்டையை போட்டுகிட்டாலும் உமது பார்பன புத்தி ஒரு போதும் மாறாது என்பதே இயற்கை விதி…இத நான் சொல்லல…யங்கள் முப்பாட்டன் வள்ளுவன் சொல்லுகிறான்.
ஆகவே,தமிழர்களுக்கு எதிராக நுட்பமாக பேசுகிறாய்…
உலகில் தடை செய்யப்பட ஆயிரக்கணக்கான மருந்துக்களை இந்திய மக்களின் மீது திணிக்கிறார்கள்.அது இங்குள்ள சாதாரண மக்களை பல வகையில் பாதிப்புகளை உண்டாக்குகிறது.அத பத்தி பேசும் உமக்கு துணிச்சல் இல்லை.
மருத்துவத்தை நீட் தேர்வு மூலமாக….
புரட்சியாளர் அம்பேத்கரின் இடஒதுக்கீட்டையும், சமூகப் பெரும் போராளி தந்தை பெரியாரின் சமூக நீதியையும் புறந்தள்ளி,
பார்பனர்கள் மட்டுமே படிக்க வகை செய்து விட்டார்கள்.அதை எதிர்க்க உமக்கு தெம்பு இல்லை….
நீர் புதுசா சித்த மருத்துவத்தை கேள்வி கேட்க வந்து விட்டீரா?????
உமது விருப்பம் போல தமிழர்களை விமர்சனம் செய்வதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் நடிகரே….உங்கள் கார்பரேட் முகத்தை தமிழர்களிடம் காட்டாதீர்கள் கமல் அய்யா….
ஏனெனில்,
மன்னிக்கவும் மறக்கவும் நாங்கள் பெரியாரின் தொண்டர்கள் இல்லை.
பிரபாகரனின் தம்பிகள்.தமிழரசனின் வாரிசுகள்….
ஜாக்ரதை…
–மு.களஞ்சியம்.