ரயில் டிக்கெட்டில் தமிழ் மொழியை எடுத்துவிட்டார்கள் – விஜய்சேதுபதி கோபம்

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’.

ஆயுதபூசை விடுமுறையையொட்டி, செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசியதன் சுருக்கம்…..

முன்பின் தெரியாத கணவன், மனைவி சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரம். அதை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ‘கருப்பன்.படத்தில் என் மனைவியாக தான்யா நடித்திருக்கிறார்.இப்படத்தின் பெயரிலிருந்து படத்தில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்துமே நம் மண் சார்ந்தவை. இது நம் மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. அதைப் பற்றி படத்தில் எதுவும் பேசவில்லை. அப்போராட்டத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறோம்.

மத்திய அரசு தேசியவிருது கொடுத்தால் வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

Leave a Response