ரசிகர்களை விவேகம் படுத்தும் பாடு இருக்கிறதே.. அட..அட..!


விவேகம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது. இத்துடன் விவேகம்‘ படத்திற்கான பட தணிக்கைகுழுவின் சான்றிதழ் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மொத்த நீளம் ரன்னிங் டைம் 149.29 (2.29)மணி நேரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் ருசிகரமான விளக்கத்தை அளித்துள்ளார். அதாவது 1 4 9 2 9 என்ற எண்களை கூட்டினால் 25 வருகிறது என்றும், அது அஜீத்தின் 25 வருட திரையுலக பயண சாதனையை குறிப்பதாகவும் ரசனையுடன் தெரிவித்துள்ளார்.

வசூல்ராஜா படத்தில் கமலும் கருணாஸும் சேர்ந்து அதிர்ஷ்ட எண்ணை கலாய்ப்பார்களே அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

Leave a Response