பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக நுழைந்துள்ள நடிகை இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து புதிய போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஓவியா வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் அடுத்தடுத்த போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர். இறுதியாக கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என தெரிவித்து இருந்தார். அவர் அறிவிப்பதற்கு முன்பே பிந்து மாதவி களமிறக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சுஜா வருணியும், நேற்று சிந்து சமவெளியில் நடித்த ஹரிஷ் கல்யாணும் புதிதாக களமிறங்கினர். இந்நிலையில் அடுத்த வரவாக நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் பங்கேற்க இருக்கிறார்.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி, ஏராளமான படங்களிலும் நடித்துள்ள காஜல் பசுபதி, ஆட்டோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இறங்கி போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்ட புதிய புரமோவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response