
கணேஷ் ஆரவ் கூட்டுசேந்து காயத்ரியை நாமினேட் ஆகிடாம பாத்துக்குவாங்க. சினேகன் ரைஸா வையாபுரி பிந்து சேந்து காயத்ரியை நாமினேட் பண்ணினாதான் உண்டு.
பரணி கெட்டவன்ங்கிற சக்தியோட அவதூறை கமல்ஹாசன் வழக்கம் போல வழவழா கொழகொழானு பி.வாசுவுக்காக கண்டுக்காம விட்டாலும் ஜனங்க விட தயாராயில்ல.
காயத்ரி சக்திக்கு ஓட்டுப்போடக் கூடாதுங்கிற மாஸ்ட்டர் மூவ்தான் டிஆர்பி க்காக காயத்ரியைக் காப்பாத்தின பிக் பாஸ் அல்பைக்கு ஓரளவாச்சும் செக் வெச்சிது.
ஓவியாவின் ஸ்கிரீன் பிரஸன்ஸ் பிக் பாஸ் வீட்டிலிருக்கிற எந்த நாய்க்கும் இல்லை. எனவேதான் எல்லா நாய்களும் வாரம் தவறாமல் அவளை நாமினேட் செய்தன.
காயத்ரி குரூப்பை சேர்ந்தவர்கள்தான் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட உணர திராணியில்லை சக்தி கனேஷ் ஆரவ் ஆகிய மூடர்களுக்கு.
ஓவியாதான் டைட்டில் வின்னர். அவள் திரும்ப வராவிட்டால் அவளைப் பற்றி நினைத்துப் பார்ப்பவர்தான் வின்னர் என்பது ரைஸா மட்டுமே அறிந்த ரகஸியம்.
காயத்ரியை நாமினேட் செய்யாதவர் தப்பித்தவறி நாமினேட்டாக நேர்ந்தால் முதல் வாய்ப்பிலேயே எலிமினேட் செய்யப்படுவார் என்பதை அறிவதே ஞான ஷக்தி.
காயத்ரி அளவுக்கு ஷக்தி கெட்டவனில்லை. ஆனால் அவன்தான் முதலில் போனான்.
ராவணன் அளவுக்கு கும்பகர்ணன் கெட்டவனில்லை. துரியோதனன் அளவுக்கு கர்ணன் கெட்டவனில்லை. ஆனால் அவர்கள்தாம் முதலில் எலிமினேட் ஆனார்கள்.
பிக் பாஸ் ஷக்தி, கும்பகணன் கர்ணன் அளவுக்கு உத்தமனுமில்லை நல்லவனுமில்லை.
நம்போல் ஆயிரத்து ஒன்றான ஜூலியை செய்ததுபோல் சினிமாவின் பெரிய இடத்துப் பிள்ளைகளான காயத்ரி ஷக்திகளை மடக்கி காயப்படுத்தமாட்டார்.
-விமலாதித்தமாமல்லன்


