மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துனைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த திரைப்பட விழா கொண்டாட்டத்தின்போது நமது இந்திய தேசியகொடியை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் சேர்ந்து ஏற்றினார்கள். மேலும் நனமது தேசிய கீஎதததை அங்குள்ளவருடன் இணைந்தும் பாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நமது தேசிய கொடியை ஏற்றிய முதல் நடிகையும் இவர் தான். “7௦வது இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் இங்கே நம் தேசிய கொடியை ஏற்றியது எனக்கும் எனது மகள் ஆரத்யாவுக்கும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கும்” என் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.