ஓவியாவைக் கொண்டாடுவது நல்லது

ஓவியாவைக் கொண்டாடுவது நல்லது.

அதைவிட அவர் யாரையும் குறை சொல்லாமல் இருக்கும் குணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

காயத்ரி, நமீதா, ரைசா, ஜூலி என்று புறம் பேசாமல் குறை சொல்லாமல் இருக்கும் அவரின் நல்ல குணமே இந்தளவுக்கு கொண்டாட வைக்கிறது.

நாம் அந்தக் குணத்தை கொண்டாடிவிட்டு அதற்கு நேர்மாறாக அவரைத் தவிர அனைவரையும் திட்டித் தீர்க்கிறோம்.

எந்த குணத்துக்காக ஒருவரைக் கொண்டாடுகிறோமா அந்தக் குணத்தை கற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது. அவருக்கு ஆதரவு கொடுப்பதை விட இது முக்கியம்.

ஓவியா ஆர்மி என்று புறப்பட்டு திட்டித் தீர்த்தால் நாம் காயத்ரி, ஜூலியிடம் இருக்கும் மாற்ற வேண்டிய மற்ற குணங்களைத்தான் கற்றுக்கொள்கிறோம் என்பது தெள்ளத் தெளிவு.

ஒரே தளம், ஒரே நிகழ்ச்சி. எதை கற்றுக் கொள்ளப்போகிறோம்? அதுவே நம்மை உயர்த்தும், வீழ்த்தும்.

Leave a Response