“என் படம் எதுன்னு நானே சொல்றேனே” ; வாய்திறந்த சிம்பு


கடந்த மாதம் சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம் டைட்டில் இருக்கும் நீளத்துக்கு ஏற்றவாறு ஓடவில்லை..அந்தப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு அந்தப்படம் நிறையவே நட்டத்தை ஏற்படுத்திவிட்டது.. அதனால் சிம்பு நடிக்கும் படங்களை இனி தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன் வருவார் என்பது கஷ்டம் தான் என பேசிக்கொள்கிறார்கள்..

அதனால் சிம்பு தானே சொந்தமாக படம் தயாரிப்பார் என்றும், தான் ஏற்கனவே நடித்து பாதியில் நிறுத்திய ‘கெட்டவன்’ படத்தையே மீண்டும் தூசி தட்டப்போகிறார் என்றும் செய்திகள் உலா வருகின்றன. இன்னும் சிலர் அவர் பில்லா-3 படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள்..

இதையெல்லாம் பார்த்த சிம்பு, இப்போது வெளியாகியுள்ள செய்திகள் எதிலும் உண்மையில்லை.. என் படத்தை பற்றி நானே விரைவில் சொல்கிறேன்.. அதுவரை இப்படி செய்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

Leave a Response