எம்.ஜி.ஆர் பட டைட்டில் ராணாவுக்கு கைகொடுக்குமா..?


ராணா நடிப்பில் தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. ராணாவின் தாத்தாவான டி.ராமநாயுடு தயாரித்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க எழுச்சி பாடல்களில் ஒன்றான ‘நான் ஆணையிட்டால்’ பாடலின் முதல் வரியையே டைட்டிலாக வைப்பதில் ராணாவுக்கு சிக்கல் என்ன இருக்கப்போகிறது..?

தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் கூட கிட்டத்தட்ட நேரடிப்படம் என சொல்லும் அளவுக்கு இந்தப்படத்தில் மயில்சாமி, ஜெகன், ஆர்.எஸ்.சிவாஜி என நம் தமிழ் நடிகர்கள் வேறு நடித்துள்ளனர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார்.. இதில் ராணா அரசியல்வாதியாக நடித்துள்ளார் காரைக்குடி பகுதியில் தான் முக்கால்வாசி படத்தையும் படமாக்கியுள்ளனர்..

இந்தப்படத்தின் ட்ரெய்லரில் ராணா ‘நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா” என பேசும் காட்சிகளை பார்க்கும்போது தமிழகத்தின் நடப்பு அரசியலை நன்றாக விமர்சிக்கும் படம் என்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Response