ஊழல் குற்றவாளிக்கு சட்டமன்றத்தில் படமா? – சிபிஎம் கண்டனம்

தமிழக சட்டப்பபேரவையில்
ஜெயலலிதா உருவப்படம் திறப்பதை கைவிட வேண்டும் என்று
சிபிஐ(எம்) வலியுறுத்தல்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில தலைவர்கள்
மற்றும் முதல்வர்களாக இருந்த குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் படங்கள்
தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர்,
மகாத்மா காந்தி, அம்பேத்கார், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், ராஜாஜி,
காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், எம்.ஜி.ஆர். ஆகிய பத்து தலைவர்களின்
படங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டே நாளில் அறிவிப்பு வெளியிட்டு முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சராக இருக்கும்போது
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, உச்சநீதிமன்றமே குற்றவாளி என
தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்
இயற்கையெய்திய காரணத்தினால், சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை.
இவ்வாறு ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு
சட்டப்பேரவை வளாகத்தில் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு,
இந்நடவடிக்கையை கைவிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி
கேட்டுக்கொள்கிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Leave a Response