ஒரே மேடையில் சீமானும் வேல்முருகனும்- தமிழ்த்தேசியர்கள் மகிழ்ச்சி


கதிராமங்கலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08-07-2017 காலை 10 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.
இன்றைக்கு தமிழ் மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் சிந்தித்து அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் சீமானும் வேல்முருகனும் ஒரு மேடையில் நின்று போராடியிருப்பது நல்ல தொடக்கம். இவ்விருவரும் தேர்தல் அரசியலிலும் இணைந்து பயணிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

Leave a Response