‘துப்பறிவாளன்’ படத்தில் மிஷ்கின் புதிய முடிவு..!


இயக்குனர் மிஷ்கின் படங்களை பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை அளவோடு இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் கதைக்கு தேவைப்படாத பட்சத்தில் பாடல்களை திணிக்கவும் மாட்டார் மிஷ்கின்.

தற்போது விஷாலை வைத்து தான் இயக்கிவரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இன்னொரு ஒருபடி மேலே சென்றுள்ளார் மிஷ்கின். அதாவது இந்தப்படத்தின் இடைவேளைக்குப்பிறகு படத்தில் பாடல்களே இடம்பெறாதாம்.

துப்பறியும் கதை என்பதால் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாகி விடக்கூடாது என்பதால் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்தி வருகிறாராம் மிஷ்கின். படத்திற்கு அரோல் குரோலி இசையமைக்கிறார்.

Leave a Response