முதல்வருக்கு இயக்குனர் விக்ரமன் கோரிக்கை..!


‘நான் யாரென்று நீ சொல்’.. இப்படி ஒரு பெயருடன் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் விக்ரமன் தற்போதையை கேளிக்கை வரி பிரச்சனை குறித்தும் தனது கோரிக்கையை முன் வைத்தார்.

“நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷயங்களை பேச மாட்டேன். ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது.. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு. வருமானத்தில் மொத்தம் 65 % வரியாக போனால் எப்படி சினிமா வாழும்..?

வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜி.எஸ்.டி கட்ட தயாராக இருக்கிறார்கள்.. மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும்.

கலைஞர் கொண்டுவந்த அந்த வரிச்சலுகையை புரட்சித் தலைவியும் கடைபிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் விக்ரமன். .

Leave a Response