விஷால் – தாணு ஒன்றுசேர விவேக் வலியுறுத்தல்..!


நாடு முழுதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி சரக்கு, சேவை வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத்துடன் தமிழக அரசு கேளிக்கை வரி 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

“திருட்டு விசிடி, டவுன்லோட், யார் யாரோ செய்யும் விமர்சனங்கள், டிக்கெட் ரேட், தற்போது, வரி – சினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்” என இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.,

“சினிமாவை காப்பாற்ற ஈகோவை விடுத்து பழைய,புதிய நிர்வாகிகள் (விஷால்+தாணு)ஒன்றிணைய வேண்டும் என்பது என் வேண்டுகோள். சினிமா வெளியீட்டு, டிக்கெட் விலை இவைகளை நெறிப்படுத்தாவிட்டால், விரைவில் தயாரிப்பாளர்களும், சினிமாவும் அழியும். உச்ச நட்சத்திரங்கள், பெரும் தயாரிப்பாளர்கள் சினிமாவரியை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால், சிறு தயாரிப்பாளரின் குரல்வளை நெறிக்கப்படும்” என கூறியுள்ளார் விவேக்.

Leave a Response