ஜெ நினைவிடத்தில் டிடிவி.தினகரன் ஏற்ற உறுதிமொழி – விவரம்

நேற்று சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

அமமுக-வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை அதில் அமமுக இடம்பெற வாய்ப்பே இல்லை.
செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி.அவரது நிலைப்பாட்டைப் பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.நான் நட்புடன் நெருங்கி பழகியவர்களில் அவரும் ஒருவர். அவரது முடிவைப் பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரைப் பற்றி விமர்சிப்பது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதையைக் குறைப்பதாக இருக்கும்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பாடு.இந்தத் தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அமமுக உறுதியாக உள்ளது. அதில் அமமுக-வின் பங்கு உறுதியாக இருக்கும். அதைத்தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முக்கிய உறுதிமொழியாக ஏற்றிருக்கிறோம். கூட்டணிக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை கண்டிப்பாக அழைக்க மாட்டார்.

தமிழ்நாட்டின் பொது நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் இடையூறு வரும் விதமாக எந்த ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ செயல்படக்கூடாது. தமிழ்நாட்டில் சாதி, மதங்களைக் கடந்து எல்லோரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ, திருவிழாக்களின் பெயராலோ எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற அரசியலை உறுதியாக ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response